2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'முஸ்லிம்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்த முஸ்லிம் கட்சிகள் ஒருமித்து குரல் கொடுக்க வேண்ட

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர், அஸ்லம் எஸ்.மௌலானா

இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பையும் இருப்பையும் நலனையும்; உறுதிப்படுத்துவதற்கு முஸ்;லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு ஒருமித்த கருத்துடன் குரல் கொடுக்க வேண்டுமென கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புகளினுடைய சம்மேளனத்; தலைவர்;  அஷ்செய்க் இஸட்.எம்.நதீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சிவில் அமைப்புகளினுடைய சம்மேளனத்தின் நோக்கங்களையும் செயற்பாடுகளையும் பொதுமக்களுக்கு விளக்குவதற்கான கொள்கை விளக்க மாநாடு, கல்முனை ஆஸாத் பிளாஸா வரவேற்பு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இன்றைய காலகட்டம் இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு நிலைமாறு காலமாகும். காரணம் முப்பது வருடகால இனப்பிரச்சினையைத் தொடர்ந்து இலங்கையில் தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கான ஏற்பாடுகளை இன்றைய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

நாடாளுமன்றத்தை அரசியல் நிர்ணயசபையாக மாற்றி, நாடாளுமன்றத்தில் அதற்கான செயலணியை உருவாக்கியிருப்பதுடன், மக்களின் கருத்தறிவதற்காக ஒரு குழுவையும் அமைத்து அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு அதன் அறிக்கைகள்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனவே இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பாக, நலன்கள் சம்பந்தமாக தீர்மானம் எடுக்கவேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம்.

இச்சந்தர்ப்பத்தை நாங்கள் தவறவிடுவோமாயின், அல்லது முஸ்லிம்களின் நலன்களை உள்வாங்காது விடுவோமாயின், அடுத்த பரம்பரை எங்கள் மீது பாரிய குற்றச்சாட்டு;களை  முன்வைக்கும்' என்றார்.

'மேலும், எமது சம்மேளனம் சமூக நலனை நோக்காகக்; கொண்ட சிவில் அமைப்பாகும்.  இந்த அமைப்பு எந்த அரசியல் கட்சியையும்  சார்ந்தது அல்லவென்பதுடன், எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானதும் அல்ல. எந்த இனத்துக்கும் எதிரானதும் அல்ல. எங்களுடைய நோக்கம் முஸ்லிம்களின் நலன்களையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்வது மாத்திரமே' எனவும்  அவர் மேலும் கூறினார்.
   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X