Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
அம்பாறை, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரிய நீலாவணை இந்துமயான வீதியில் காணப்படும் குப்பைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களிலிருந்து கொண்டுவந்து கொட்டப்படுகின்றமை தொடர்பில் தெரியவந்துள்ளதாக அம்மாநகர சபையின் பிரதம பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஐ.எல்.எம்.ஏ.முனவ்வர் தெரிவித்தார்.
பெரிய நீலாவணையிலுள்ள பசளை உற்பத்தி நிலையத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளினால் பெரிய கல்லாறு இந்துமயானம், தமிழ் வித்தியாலயம், பத்திரகாளி அம்மன் கோவில் ஆகியவற்றின்; சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கல்முனை மாநகர சபைக்கு மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபை அதிகாரிகள் முறைப்பாடு செய்திருந்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் சகிதம் தாம் திங்கட்கிழமை (08) மேற்கொண்ட கள விஜயத்தின்போது, இது தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
குறித்த பசளை உற்பத்தி நிலையத்தில் மரக்கறிக் கழிவுகள் மாத்திரம் சேகரிக்கப்பட்டு ஒழுங்காகப் பேணப்படுவதை அவதானித்த அதேவேளை, மயானத்துக்கு முன்பாகவுள்ள வீதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதையும் அதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதையும் அவதானித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், குப்பைகளில் காணப்பட்ட மின்சாரக் கட்டணப் பட்டியல்கள், அலுவலகப் பதிவேடுகள் உள்ளிட்ட சில ஆவணங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேசங்களை அடையாளப்படுத்துவதையும் காணமுடிந்தது. இது தொடர்பில் மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில்; இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை இரண்டு உள்ளூராட்சிச் சபைகளும் இணைந்து தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
27 minute ago
33 minute ago