Suganthini Ratnam / 2017 மே 07 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
நாடளாவிய ரீதியில்; மத்தியஸ்த சபை உறுப்பினர்களாக 2,400 பேர் அதன் ஆணைக் குழுவினால் நியமிக்கப்பட்ட நிலையில், கடமையாற்றி வருவதாக அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் கே.விமலநாதன் தெரிவித்தார்.
அம்பாறையின் கரையோரப் பிரதேச மத்தியஸ்த சபைகளுக்கான மீளாய்வுக் கூட்டம், அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை (6) நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'மக்கள் திருப்திப்படும் வகையில் மத்தியஸ்த சபைகள் பக்கச்சார்பின்றியும் இலாப நோக்கமின்றியும் செயற்பட வேண்டும். அப்போதே மத்தியஸ்த சபை சிறந்ததாக அமையும்.
மத்தியஸ்த சபைகள் மக்களின் பிரச்சினைகளை சரியான முறையில் கண்டறிந்து எந்தப் பாராபட்சமின்றித் தீர்வை வழங்க வேண்டும் என்பதுடன், மத்தியஸ்த சபைகளிடம் முன்வைக்கப்படும் பிரச்சினைகளை தட்டிக்கழிக்காமலும், முறைப்பாட்டாளர்களைச் சிறந்த முறையில் அணுகி அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும்.
தற்போது மத்தியஸ்த சபைகளில் நிதி தொடர்பான பிணக்குகளைக் கையாளுவதற்கு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு, 5 இலட்சம் ரூபாய்க்கு உட்பட்ட பிணக்குகiளாட தீர்ப்பதற்கு நீதிச் சேவை ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என்றார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago