Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
சிறுபோக அறுவடையின் பின்னர் வயல்களில் வைக்கோலை எரிக்கும் விவசாயிகளின் உரமானியத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அறுவடையின் பின்னர் வைக்கோலை எரிப்பதால் ஏற்படக்கூடிய தீமை பற்றியும் வைக்கோலை நிலத்தில் இடுவதால் ஏற்படக்கூடிய நன்மை பற்றியும் விழிப்புணர்வுப் பேரணிகளை விவசாயத் திணைக்கள அதிகாரிகள் நடத்தியதுடன், இது தொடர்பான துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்துள்ளனர்.
இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் பின்னரும் அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்களில் வைக்கோலை எரிப்பதை காணமுடிகின்றது' என்றார்.
'வயல்களில் வைக்கோலை எரிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன், 2016.06.07 அன்று நடைபெற்ற மாவட்ட விவசாயக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய வைக்கோலை எரிக்கும் விவசாயிகளின் 01 ஏக்கருக்கான உரமானியத்தை இடைநிறுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வயல்களில் வைக்கோல் எரிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் தகவல் பிரதேச விவசாயப் போதனாசிரியர் ஊடாகத் திரட்டப்படவுள்ளது.
இரசாயனப்பசளை பாவனையின் அதிகரிப்புக் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான சிறுநீரக நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்' என்றார்.
10 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
56 minute ago
1 hours ago