2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'விரைவில் ஆளுங்கட்சியுடன் இணைவேன்'

Niroshini   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

தேசிய அரசாங்கம் என்பதால் நாங்கள் அனைவரும் ஆளுங்கட்சியுடன் இணைந்து செயற்படவே விரும்புகின்றோம்.இந்நிலையில்,கட்சி மாற்றம் பற்றி மிகக் கடுமையாக சிந்தித்து வருகின்றேன். எனவே, நானும் மிக விரைவில் கட்சி மாறுவேன் என கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் கூடியபோது சபையின் எதிர்க் கட்சி உறுப்பினர்களான அமீர் மற்றும் இனியபாரதி ஆகியோர் ஆளுங்கட்சி பக்கம் இணைந்து கொண்டனர்.இது தொடர்பில் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தேசிய காங்கிரஸ் அணியிலிருந்து தெரிவு செய்யப்பட்டு வந்த மாகாண சபை உறுப்பினர் அமீர் இன்று ஆளும் தரப்பில் இணைந்துள்ளார். நாளை நானும் ஆளுங்கட்சியுடன் இணையலாம்.

நாங்கள் மக்கள் பிரதிநிதி. மக்களுக்காகவே எங்கள் உயிரை அர்ப்பணிக்கவுள்ளோம். அதனால் மக்களின் தேவை கருதி அவர்களின் தேவையை பூர்த்தி செய்பவர்களாக செயற்பட்டு வருகின்றோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X