2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'வெற்றிடத்தை விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவும்'

Niroshini   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா,ரீ.கே. றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் வெற்றிடத்தை விரைவாக நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளராக கடமை புரிந்தவர் பதவி உயர்வு பெற்று சென்றதனால் ஏற்பட்ட வெற்றிடம் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருக்கின்றதனால் அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திப் பணிகள் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளது.இதனால், அம்பாறை மாவட்ட மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்த கண்டியில் இருந்து பாணம வரை பெரும்பான்டையினரும் பெரியநீலாவனை தொடக்கம் பாணம வரை உள்ள கரையோரப் பிரதேசங்களில் சிறுபான்மையினரும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில்,அம்பாறை மாவட்டத்துக்கான பிரதம பொறியியலாளர் பதவி வெற்றிடமாக உள்ளதால் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக தங்களின் கருமங்களை நிறைவேற்ற முடியாதுள்ளதாக அம்பாறை மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே,இது தொடர்பில் சம்பந்தப்பட்டோர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை,திருமலை மாவட்டத்துக்கும் பிரதம பொறியியலாளர் ஒருவரை நியமித்து திருமலை மாவட்ட பாதை அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X