2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'வேலைவாய்ப்பின்போது அனைத்து இன இளைஞர், யுவதிகளை உள்வாங்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்போது, பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் நிலை மாற்றப்பட்டு  அனைத்து இன இளைஞர், யுவதிகளையும் உள்வாங்கும் நிலைமை உருவாக்கப்பட வேண்டுமென நாவிதன்வெளி  பிரதேச  இளைஞர் குழுவினர் தெரிவித்தனர்.

எமது பிரதேசத்தில் தொழிலொன்றுக்காக விண்ணப்பம் கோரப்பட்டபோது, எங்களில்; சிலர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அத்தொழிலுக்கான நியமனம் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவரென்ற காரணத்துக்காக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான பொதுமக்களின் கருத்தறியும் அமர்வு, அம்பாறை, கல்முனை கிறிஸ்டா இல்ல மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இங்கு அக்குழுவினர் மேலும் தெரிவிக்கையில், 'பாதுகாப்புப் பணிக்கான பாதுகாப்புப்படையில் அனைத்து இன மக்களும் உள்வாங்கப்பட்டு பல்லினப்படுத்துவது மிக அவசியமாகும்' எனவும் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X