2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஆதரவு அளித்தால் போராட்டம் முன்னெடுக்கப்படும்'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 21 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்; தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஏலவே பணம் வாங்கிக்கொண்டு 18ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு அளித்தமை போன்று வடக்கு, கிழக்கு மாகாண இணைப்புக்கும் ஆதரவு அளிக்கவுள்ளார்.

இவ்வாறு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் இதற்கு எதிராக மக்கள் சக்தியை ஒன்றிணைத்துக்கொண்டு போராடவுள்ளதாக  கிழக்கு எழுச்சியின் தலைவர் வபா பாறூக் தெரிவித்தார்.

கிழக்கு எழுச்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'கிழக்கு மண்ணில் உள்ள தலைமைத்துவம் மட்டுமே முஸ்லிம் காங்கிரஸின் நோக்கத்தை அடையாளப்படுத்தலாம். இல்லாவிட்டால,; அந்த தலைமைத்துவம் தனது சுயதேவைகளை மாத்திரம் அடைந்துகொள்ளும்.

எக்காரணம் கொண்டும் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்புக்கு முஸ்லிம் தலைமைகள் ஆதரவு வழங்கக்கூடாது. ஆனால், அவர்களின் சுயதேவைகளுக்காக அதற்கு ஆதரவு வழங்க முன்வந்தால் மக்கள் சக்தியை ஒன்றிணைத்து போராடுவோம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X