2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'வயல் நிலங்களை அளவீடு செய்வதை நிறுத்தவும்'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்,கனகராசா சரவணன்

அம்பாறை, ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட சுமார் 2,000 ஏக்கர் வயல் நிலங்களை வனவள அதிகாரிகள் நில அளவை செய்து கையகப்படுத்தும் செயற்பாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டப் பேரணி இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

ஆலையடிவேம்புப் பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆரம்பித்த பேரணி, மீண்டும் பிரதேச செயலகத்தை அடைந்தது.
இதனை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் ஆகியோரிடம் விவசாயிகள் மகஜர் கையளித்தனர்.

இதற்கான தீர்வைப் பெற்றுத் தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.

விவசாய அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது விவசாயிகள் தெரிவிக்கையில், 'தோணிக்கல், தோணிக்கல் மேல்கண்டம், தோணிக்கல் தென்கண்டம், டிப்போமடு ஆகிய பகுதிகளிலுள்ள தங்களின் வயல் நிலங்களை சுவீகரிக்கும் நோக்கில் வனவள அதிகாரிகள் நில அளவை செய்து வருகின்றனர்.

வயல் நிலங்களை நில அளவை செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன், விவசாயிகளின் வயல் நிலங்கள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும்' என்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X