Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூலை 18 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
பொத்துவில்லுக்கு நீரை வழங்கும் ஹெடஓயா திட்டத்துக்கு எதிரான இனவாதப் பிரசாரத்தை முறியடித்து அத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவதுடன், 2017ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்துக்குள் அத்திட்டத்தை உள்ளடக்குவதற்கும் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பொத்துவில் உல்லே ஜும்மா பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை (17) அமைச்சருக்கும் ஹெடஓயா வேலைத்திட்ட அபிவிருத்திக் குழு, பொத்துவில் ஜம்இய்யத்துல் உலமா மற்றும் பள்ளிவாசல்கள் சம்மேளனத்துக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'பொத்துவில் பிரதேசம் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றது. இக்குடிநீர் தட்டுப்பாட்டுப் பிரச்சினையை முடிந்தளவு தீர்ப்பதற்கு நான் பல முயற்சிகளை எடுத்து வருகிறேன். இப்பிரச்சினையை முழுமையாக நான் அறிவேன். என்னால் முடியுமானவரை மிக விரைவில் இப்;பிரச்சினையைத் தீர்த்துவைப்பதற்கே நான் முயற்சிக்கிறேன். அந்த அடிப்படையில்; ஹெடஓயா திட்டத்தைப் முடிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன்.
இந்த விவகாரம் அமைச்சரவைக்குக் கொண்டு செல்லப்பட்டு இப்போது பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களைக் கையாளும் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தக்குழுவில் நானும் உறுப்பினராக இருக்கின்றேன். மிக விரைவில் அந்தத் திட்டத்தைச் செய்து முடிப்பதற்கு அவசியமான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறேன்.
இந்தத் திட்டத்தைத் தடுப்பதற்கான இனவாத முயற்சிகள் இடம்பெறுவதையும் நான் அறிவேன். சூழலியல் ஆர்வலர்கள் என்ற பெயரில் இனவாதிகள் இதைத் தடுக்க முயற்சிக்கின்றனர். இந்தத் திட்டம் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் பிரசாரம் செய்கின்றனர். ஆனால், இது ஒரு பெரிய விடயம் அல்ல. அந்தப் பிரசாரங்களை இந்த ஹெடஓயாத் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பேன். இதை 2017ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்துக்குள் உள்ளடக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன'என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
42 minute ago
45 minute ago
47 minute ago