2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஊர்காவல் படை வீரர் கைது

Super User   / 2012 ஒக்டோபர் 24 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அட்டாளைச்சேனை, அஷ்ரப் நகர் பிரதேசத்தில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்;பிரயோகம் செய்த ஊர்காவல் படை வீரர் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அஷ்ரப் நகர் பிரதேசத்தில் திங்கட்கிழமை மாலையில் குறித்த சிறுமியை ஊர்காவல் படைவீரர் பலவந்தமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்துஇ குறித்த ஊர்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் அஷ்ரப் நகரைச் சேர்ந்த 33 வயதான  ஊர்காவல் படையினராவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இதேவேளைஇ அஷ்ரப்நகர் பிரதேசத்தின் குப்பை மேட்டில் கைவிடப்பட்ட துப்பாக்கி ஒன்றினை இன்று பதன்கிழமை மீட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள குப்பைகளை கொட்டும் அஷ்ரப்நகர் பள்ளக்காட்டு பிரதேசத்திலேயே கைவிடப்பட்ட நிலையில் இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

குப்பை கொட்டும் பிரதேச சபை உழியர்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததை அடுத்தே பொலிஸார் எஸ்.எம்.ஜி. ரக துப்பாக்கியினை மீட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X