2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

14,000 ஹெக்டேயர் விவசாய காணிகள் வெள்ளத்தினால் பாதிப்பு

Kanagaraj   / 2015 ஜனவரி 01 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில் 2014, 2015 பொரும்போக (மகாபோக) வேளாண்மை செய்யப்பட்ட 14 ஆயிரம் ஹெக்டேயர் காணிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், வியாழக்கிழமை (01) தெரிவித்தார்.

சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் கூடுதலான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்தார்.

4528 ஹெக்டேயர் நெற் செய்கை காணிகள் முழுமையாகவும் 220 ஹெக்டேயர் மரக்கறி செய்கை காணிகளும், 430 ஹெக்டேயர் உப உணவு பயிர்ச் செய்கை காணிகளும், 3630 வீட்டுத்தோட்ட பயிர் செய்கை காணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான பாதிப்பினால் பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் நஷ்டயீடு வழங்குமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X