Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 14 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
பிரதமரும், புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சருமான டி.எம். ஜயரட்ன இன்று அம்பாறைக்கு விஜயம் செய்துள்ளார்.
இவர் காலை அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடலில் பங்குபற்றினார்.
இக்கலந்துரையாடலில், அமைச்சர் பீ.தயாரட்ன, புத்தசாசன மற்றும் மதவிவகார பிரதி அமைச்சர் கே.டி.எஸ்.குணவர்த்தண, கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சிறியாணி விஜேவிக்ரம, ஏ.எச்.எம்.அஷ்வர், கிழக்கு மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர, உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிற்பகலில் அம்பாறை நகரிலுள்ள பள்ளிவாசல், கோவில், கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் பௌத்த தேவாலயங்களுக்கும் விஜயம் செய்தார்.
இலங்கை முழுவதும் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்துகின்ற மதஸ்தாபனங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் ஆன்மீக வளர்ச்சி செயற்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள மதஸ்தாபனங்களுக்கு நிதி உதவிகளும் பிரதமரால் வழங்கப்பட்டன.
பிரதமர் இங்கு உரையாற்றுகையில்:-
கிழக்கு மாகாணத்திலுள்ள மதஸ்தாபனங்களை அபிவிருத்தி செய்ய கூடுதலான நிதியினை அரசு ஒதுக்கியுள்ளது என்றார்.
18 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
53 minute ago