Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அம்பாறை பிரதேச செயலகத்திற்கு சேவையினை பெறவரும் பொதுமக்களின் நன்மைகருதி நேற்று வெள்ளிக்கிழமை முதல் தனித்தனி விசேட கருமபீடங்களும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2009ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தின் சிறந்த பிரதேச செயலகமாக தெரிவு செய்யப்பட்ட அம்பாறை பிரதேச செயலகம் கடந்த வருடங்களைவிட இவ்வருடம் மேலும் பல வசதிகளை பொதுமக்களுக்காக செய்துள்ளது.
நிறுவன, பொதுஜன, காணி, கணக்காளர், சமுர்த்தி, பதிவு, விளையாட்டு, பொதுவசதிகள், வாகன அனுமதிப்பத்திரம், சுகாதாரம் என பல பிரிவுகள் தனித்தனியாக அமையப் பெற்றிருப்பதுடன் பொதுமக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்வதற்கென ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் வழங்க விசேடமாக அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
22 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட அம்பாறை பிரதேச செயலகத்திற்கு தேவையின் பொருட்டு வரும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நன்மை கருதி, தமிழ் தெரிந்த அதிகாரிகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அம்பாறை பிரதேச செயலாளர் ஜீ.எல்.ஆரியதாச தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
12 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
47 minute ago