2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சிங்கள மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கும் திட்டம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 17 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)                                 

அம்பாறை கல்வி வலயத்திற்குட்பட்ட சிங்கள பாடசாலை மாணவர்களுக்கு தமிழ் மொழியினை கற்பிக்கும் செயற்பாடு ஒன்றினை அம்பாறை கற்றலுக்கும் அபிவிருத்திக்குமான  வள நிலையம் முன்னெடுத்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட 75 சிங்கள பாடசாலை மாணவர்களுக்கு முதற்கட்டமாக இச்செயல்திட்டத்தின் கீழ் இன்று அம்பாறை காமினி வித்தியாலயத்தில் இத்தமிழ் பாட பயிற்சிநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஊடகவியலாளரும் பாடசாலை அதிபருமான திலக் அழககோன் பிரதம வளவாளராக கலந்து கொண்டு தமிழ் மொழியின் முக்கியத்துவம் பற்றி சிங்கள மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.  இதேபோன்று தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கும் சிங்கள மொழியை போதிப்பதற்கான திட்டமொன்றினையும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அதிபர் திலக் அழககோன் தமிழ் மிரருக்கு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .