2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக எம்.எஸ்.எம்.ஜாபீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.

காத்தான்குடியைச்சேர்ந்த இவர், தற்சமயம் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றி வருகிறார்.

150 வருட வரலாற்றில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்தடவையாகும். அத்துடன் மட்டக்களப்பு பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக டொக்டர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வருகிறார்.

இவ் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக ஏ.எல்.எம்.நஸீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பதுளை பிராந்திய வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வருகிறார். ஏற்கனவே இவர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திர ருபேருவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .