Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை நிருவாகங்களுக்குட்பட்ட வடிகாண்கள் முறையாகப் பராமரிக்கப்படாததாலும், சரியான முறையில் நிர்மாணிக்கப்படாமையாலும், இவ் வடிகாண்களினூடாக நீர் வழிந்தோட முடியாததொரு நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தற்போது பெய்ய ஆரம்பித்துள்ள மாரி மழையினால், மேற்படி பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படக் கூடிய ஆபத்து நிலை தோன்றியுள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
இது குறித்து பொதுமக்களும், ஊடகங்களும் பல்வேறு தடவைகள் சுட்டிக் காட்டியிருந்த போதிலும், அவை தொடர்பில் சம்பந்தப்பட்டோர் கவனம் செலுத்தவில்லை என அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 'தமிழ்மிரரிடம்' தெரிவித்தனர்.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் பிரதான வீதியின் இரு மருங்கிலும், தொடரற்ற முறையில் ஆங்காங்கே வடிகாண்கள் அமைந்துள்ளதனால், நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வெள்ள ஆபத்து ஏற்படக் கூடியதொரு நிலை ஒரு புறமும், டெங்கு போன்ற நோயினைத் தோற்றுவிக்கக் கூடிய நுளம்புப் பெருக்கம் ஏற்படக் கூடியதொரு நிலை இன்னொரு புறமும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதுபோலவே, அக்கரைப்பற்றின் பிரதான வீதியோரங்களிலும், வடிகாண்கள் முறையாகப் பராமரிக்கப்படாமையினால், அங்கு அசுத்த நீர் நீண்டகாலமாகத் தேங்கி நிற்பதாகவும் அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
எனவே, இவ் விடயங்கள் குறித்து உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்கள்.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago