Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 02 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலைகளுக்கு முன்னாலுள்ள பிரதான வீதியோரம் வாகனங்களை நிறுத்துவோரிடமிருந்து சட்டவிரோதமாக பணம் அறவிட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் குறித்து கடந்த மாதம் கல்முனை மாநகரசபை மேயர் எம்.இஸட்.மசூர் மௌலானாவிடம் சுட்டிக் காட்டியபோது, கல்முனை மாநகரசபை எல்லைக்குள் வாகனங்களை நிறுத்துவோரிடமிருந்து தனிநபர்கள் எவரும் பணம் அறவிட முடியாது என்றும், அவ்வாறு அறவிடும் உரித்து மாநகரசபைக்கு மட்டுமே உண்டு என்றும் கூறியதோடு, இது குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், இதுவரை மாநகரசபையினால் இச்சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
குறிப்பிட்ட வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை பார்வையிடுவதற்கும், வேறு தேவைகளுக்குமாக வருகைதருவோர் தமது வாகனங்களை வைத்தியசாலைகளுக்கு முன்னாலுள்ள வீதியோரம் நிறுத்தி விட்டுச் செல்கின்றார்கள்.
இதன்போதே மேற்குறிப்பிட்ட வாகனத்தை நிறுத்துவோரிடமிருந்து தனிநபர்கள் பணம் அறவிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு பல ஆயிரம் ரூபாய்களை இவ்வாறு மேற்படி நபர்கள் சட்டவிரோதமாக பொதுமக்களிடமிருந்து அறவிட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago