2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

அரிசி ஆலையினுல் புகுந்த யானை

Super User   / 2010 நவம்பர் 02 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மீனோடைக்கட்டு பகுதியிலுள்ள அரிசி ஆலையொன்றினை உடைத்துக் கொண்டு நுழைந்த யானை அங்கு வைக்கப்பட்டிருந்த அரசி மூடைகளைச் சேதமாக்கி உட்கொண்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

மேற்படி அரிசி ஆலைக்குள் நுழைவதற்கு முன்னதாக, அந்த ஆலை அமைந்துள்ள வளவின் சுற்றுமதிலை யானை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளது.

குறித்த அரிசி ஆலையினுள் கடந்த இரண்டு வாரங்களில் இந்த யானை மூன்றாவது தடவையாக நுழைந்து சேதங்களை ஏற்படுத்தியிருப்பதாக அரிசி ஆலைலையின் உரிமையாளர் தெரிவித்தார்.

சமீப காலமாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்று முன்தினமிரவு யானை புகுந்த பாலைமுனை உதுமாபுரம் பகுதிக்குள் நேற்றிரவும் யானைகள் நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தியதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.


 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .