2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இ. போ.ச பஸ்களில் பயணிக்க பாஸ்

Super User   / 2010 நவம்பர் 03 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் இலவசமாக பயணிக்க பாஸ்களை வழங்குவதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உறுதியளித்துள்ளார்.

5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலம் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற திருக்கோவில் கலைமகள் வித்தியாலய மாணவி சுபதா மாதவனை பாராட்டி கௌரவிக்கும் வைபவத்தில் இன்று பிரதம அதிதயாக கலந்து கொண்ட போதே இந்த உறுதிமொழியை முதலமைச்சர் வழங்கினார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவருமான மீரா எஸ். இஸ்ஸதீன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப செயலாளர் எம்.எப்.றிபாஸ் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்த போதே இந்த உறுதி மொழியினை முதலமைச்சர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X