Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 11 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனையில் சர்வதேச ரீதியிலான விளையாட்டு மைதானமோ அன்றி தேசிய ரீதியிலான விளையாட்டு மைதானமோ இல்லாத நிலையில் கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக் கழகம் தேசிய ரீதியிலான கால்பந்தாட்ட போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.
இவ்வாறு திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக் கழகத்திறகு அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் முகவெற்றிலை என வர்ணிக்கப்படும் கல்முனை பிரதேசத்திலுள்ள கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக்கழகம் அகில இலங்கை கால்பந்தாட்ட சங்கம் நடத்திய டிவிசன் 2 பிரிமியர் லீக் கால்பந்தாட்ட போட்டியில் சம்பியன்களாக தெரிவுசெய்யப்பட்டு பிரிமியர் லீக் கிண்ணத்தையும் சுவீகரித்து இரண்டரை இலட்சம் ரூபாய் பணப்பரிசினையும் பெற்றிருப்பது குறித்து தான் பெரு மகிழ்சியடைகிறேன். இவ்வெற்றி அம்பாறை மாவட்டத்திலுள்ள ஏனைய விளையாட்டுக் கழகங்களுக்கு ஒரு உந்துதலாக அமையும் எனவும் இவ்வெற்றிக்காக உழைத்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
7 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
40 minute ago