2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

தோணாவிலில் புல்லினம் அழிக்கும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 21 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாளிகைக்காடு தோணாவில்  பகுதியில் வளர்ந்து காணப்படும் ஒரு வகை புல்லினத்தை அகற்றுவதற்கான சிரமதானப் பணியினை இன்று ஞாயிற்றுக்கிழமை மாளிகைக்காடு மனிதாபிமான சமூகசேவை அமைப்பு மேற்கொண்டுள்ளது.

அமைப்பின் தலைவர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்ற சிரமதான நிகழ்வில், இப்பிரதேசத்தைச் சேர்ந்த விளையாட்டுக்கழகங்கள், சமூகசேவை அமைப்புகள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் கலந்துகொண்டனர்.

தோணாவில் இந்த புல்லினங்கள் வளர்ந்து காணப்படுவதால் நீரோட்டம் தடைப்பட்டு துர்நாற்றம் வீசுவதுடன், நுளம்புப் பெருக்கம் ஏற்படுவதற்கு ஏதுவாகின்றது.

இப்புல் பூக்கும் காலங்களில்  இதன் பூவிலிருந்து வெளியாகும் ஒரு வகையான தூள் பொதுமக்களுக்கு ஒரு வகையான கடியை ஏற்படுத்துவதாக அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .