2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஒலுவில் - அட்டப்பள்ளம் எல்லையில் மயில்களின் நடமாட்டம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 21 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

ஒலுவில் -  அட்டப்பள்ளம் எல்லையில் மனித நடமாட்டமுள்ள பிரதான வீதியருகே கடந்த சில நாட்களாக பெருமளவிலான மயில்களின் நடமாட்டத்தைக் காணக்கூடியதாகவுள்ளது.

இதனை பொதுமக்களும் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

மிக அதிகளவில் கூட்டமாக இங்கு வந்துள்ள மயில்கள் மிகச் சாதாரணமாக, அங்குள்ள நெல்வயல்களில் உணவு பொறுக்குவதை நமது கமராவில் பதிவு செய்து கொள்ள முடிந்தது.

இதேவேளை, இந்த மயில்களை சிலர் வேட்டையாடுவதற்கு முயற்சி செய்வதாக அங்குள்ள மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மயிலின் இறகு மற்றும் மயில் இறைச்சியிலிருந்து பெறப்படும் எண்ணெய் போன்றவற்றுக்காக மயில்கள் வேட்டையாடப்படுகின்றன.

இலங்கையில் மயில்கள் பாதுகாக்கப்பட்ட பறவையினம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .