Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 22 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக பதவியேற்றமையையொட்டி, கல்முனை பொலிஸாரின் விசேட அணிவகுப்பு மரியாதையுடனான நிகழ்வொன்று இன்று திங்கட்கிழமை காலை கல்முனை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேராவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அப்பொலிஸ் நிலையத்தின் அனைத்துத்தர உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர்.
இங்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உரையாற்றுகையில்,
இந்த நாட்டில் நீண்டகாலமாக புரையோடிப்போயிருந்த பயங்கரவாதத்தை இல்லாமல் செய்தவர் என்கின்ற வகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரலாற்றில் பெருமைமிக்கதொரு இடத்தைப் பெற்றுள்ளார். அவ்வாறானதொரு ஜனாதிபதி இரண்டாவது முறையாகப் பதவியேற்றமையானது நமது நாட்டுக்கு கிடைத்த மற்றுமொரு சிறந்த சந்தர்ப்பமாகும்.
இந்த ஜனாதிபதியின் காலத்தில் பொலிஸ் மற்றும் முப்படைகளின் ஆற்றலும், மதிப்பும் அதிகரித்துள்ளது.
மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதில் பொலிஸாராகிய நாம் எப்போதும் முதன்மையானவர்களாக இருக்கவேண்டும் என்றார்.
51 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
54 minute ago
1 hours ago