Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 23 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
டெங்கு ஒழிப்பு தொடர்பாக கடந்த சில காலமாக கல்முனைப் பிரதேசத்தில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவன உத்தியோகஸ்த்தர்களும் சுகாதார திணைக்களமும் பல வழிகளில் விழிப்புணர்வு கருத்தரங்குகளையும், ஊர்வலங்களையும் நடத்தியது.
எனினும், கல்முனை பிரதேசத்தில் அனைத்துத் திணைக்களங்களும் அமைந்துள்ள கல்முனை இலங்கை வங்கி வீதியில் மிக நீண்ட காலமாக டயர் ஒன்று சுவரில் சாத்தியும் அயலிலுள்ள காணியில் டயர் கிடத்தியும் வைக்கப்பட்டுள்ளது.
இவ் வீதியில் நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, மீன் பிடி கூட்டுத்தாபனம், கால் நடை வைத்தியசாலை, கிறிஸ்த்தவ தேவாலயம், இலங்கை வங்கி, இலங்கை மின்சார சபை, வீடமைப்பு அதிகார சபை, கல்முனை பிரதம தபாலகம், கல்முனை தமிழ் பிரதேச செயலம், இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை சாலை ஆகியன அமைந்துள்ளன.
சாத்தி வைக்கப்பட்டுள்ள டயரினுள் நீர் தேங்கி நிற்பதனால் நுளம்புகள் பரவக்கூடிய அபாயகரமான நிலையொன்று தோன்றலாம் என பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
51 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
54 minute ago
1 hours ago