Super User / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.ஆர்.அஹமட்)
பல்கலைக்கழகத்தில் பகடிவதைகளில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறுகின்றவர்களின் பல்கலைக்கழக அனுமதி இரத்துச்செய்யப்படும் அளவிற்கு நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் இடமளிக்கபபட்டுள்ளது என தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.
2009/2010 புதிய கல்வியாண்டு மாணவர்களின் பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டத்தில் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"சிரேஷ்ட மாணவர்களின் அறிவுறுத்தல்கள் ஒரு போதும் நல்ல மாணவர்களை உருவாக்கமாட்டாது. அரசாங்கமும் எமது பல்கலைக்கழகமும் எதிர்பார்க்கும் நாளைய தலைவர்களை உருவாக்குவதற்கு பெற்றோர்களாகிய நீங்கள் அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
பகடிவதையில் இலங்கை பல்கலைக்கழகங்கள் முதலிடத்தை வகிப்பதகவும் தெரிவிக்கப்படுகின்றன. இது வெட்கப்பட் வேண்டியதாகும். பகடிவதையில்லாத சர்வதேச தரத்திலான பல்கழலக்கழகத்தை ஏற்படுத்துவதே எமது இலட்சியமாகும்" என்றார்.
.jpg)
.jpg)
.jpg)
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025