2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

இரும்புப் பாலம் மக்கள் போக்குவரத்து செய்யமுடியாத வகையில் கீழிறங்கியுள்ளது

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது வொலிவேரியன் வீட்டுத் திட்டத்திற்கு செல்லும் கரைவாகு ஆற்றுக்கு மேலாக போடப்பட்டுள்ள இரும்புப் பாலம் மக்கள் போக்குவரத்து மேற்கொள்ள முடியாத வகையில் கீழிறங்கியுள்ளது.

இப்பாலம் ஒரு மாதகாலத்திற்கு முன் பாதையின் மட்டத்தை விட தரையிறங்கியபோது, சுமார் ஒரு இலட்சம் ரூபாய் செலவில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் கொங்கிறீட் இடப்பட்டு பாதையின் மட்டத்திற்கு உயர்த்தப்பட்டது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தற்போது  இப்பாலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பாதையினூடாக போக்குவரத்து அதிகளவில் இடம்பெறுவதுடன்,  மாவடிப்பள்ளி மற்றும் சம்மாந்துறை போன்ற இடங்களுக்கு செல்வதற்கு சுருக்கமான வழிப்பாதையாக இப்பாலம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X