Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 17 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
கல்முனை இலங்கை வங்கியின் தன்னியக்க இலத்திரனியல் பணப்பரிமாற்ற இயந்திரம் சுமார் மூன்று வாரங்களாக இயங்காமல் உள்ளது.
கல்முனை இலங்கை வங்கிக்கு சொந்தமான ஒரே ஒரு தன்னியக்க இலத்திரனியல் பணப்பரிமாற்ற இயந்திரம் சுமார் 4 மாதங்களாக அடிக்கடி பழுதடைந்து சீர்செய்யப்பட்டு வந்தது.
எனினும் கடந்த மூன்று வாரங்களாக இந்த இயந்திரம் முற்றாக இயங்காததன் காரணமாக தாங்கள் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்முனை பிரதேசத்தில் உள்ள அரசாங்க ஊழியர்களது சம்பளம் மற்றும் ஏனைய கொடுக்கல் வாங்கள் நடவடிக்கைகள் கல்முனை இலங்கை வங்கி கிளையின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கல்முனை இலங்கை வங்கி முகாமையாளர் எம்.ஏ. ஹூஸைனிடம் கேட்டபோது,
குறித்த தன்னியக்க இலத்திரனியல் பணப்பரிமாற்ற இயந்தரத்திற்கு தேவையான உதிரிப்பாகம் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரவேண்டியிருப்பதனால் சீர்செய்ய இன்னும் மூன்று வாரங்கள் எடுக்கும் எனக்கூறினார்.
38 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago