Menaka Mookandi / 2010 டிசெம்பர் 23 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
உலக சாரணர்கள் கலந்து கொள்ளும் 8ஆவது சாரணியர் ஜம்போரி எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ளது. அக்கரைப்பற்று – கல்முனை சாரணிய மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த சாரணிய ஜம்போரியில் கலந்துகொள்ள தயாராகி வருவதாக மாவட்ட சாரணிய ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா தெரிவித்தார்.
தற்போது நாட்டில் பூரண சமாதானம் நிகழ்வதனால் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சாரணர்கள் இச்சாரணிய ஜம்போரியில் கலந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ஜம்போரியில் கலந்து கொள்ளும் சாரணிய மாணவர்களுக்கான கடமை சம்பந்தமான அறிவூட்டல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த சாரணர் ஜம்போரியல் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சாரணியர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
48 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
48 minute ago
58 minute ago
1 hours ago