2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

மதில் இடிந்து விழுந்ததால் சிறுவன் பலி: பலர் காயம்

Super User   / 2010 டிசெம்பர் 28 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சி.அன்சார், எஸ்.எம்.எம்.ரம்ஸான்)

சம்மாந்துறையில் மதில் சுவர் விழுந்ததினால் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுனின் தாய் மதில் சுவர் விழுந்ததினால் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார்.

இதேவேளை சிசுவொன்றும் தந்தை மற்றும் இரண்டு குழந்தைகளும் காயமடைந்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சம்மாந்துறை, விளினையடி பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மன்சூர் றிஸ்கான் எனும் 12 வயது சிறுவனே சம்பத்தில் உயிரிழந்தவராவர்.

தற்போது பெய்துவரும் அடை மழை காரணமாக வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மதில் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

  • raheem naleem Wednesday, 29 December 2010 02:50 AM

    இதற்கு மனம் வருந்துகிறன்

    Reply : 0       0

    sham Wednesday, 29 December 2010 03:16 PM

    பாவம் ஏழை மக்கள் , எல்லாத் துன்பங்களும் அவர்களுக்குத்தான். கஷ்டப்பட்டு உழைப்பதும் அவர்கள்தான்..சாபுடுவதட்கும்..வீடு வசதி இல்லாமல் இருபது எல்லாமே அவர்களுகத்தான்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X