2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சட்டவிரோத உர விற்பனையில் ஈடுபட முயன்ற மூவர் அக்கரைப்பற்றில் கைது

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 02 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று, பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் விவசாயிகளுக்கு மானியஅடிப்படையில் வழங்கிய உரவகைகளை சட்டவிரோதமான முறையில் பொதி செய்து விற்பனைக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட 3 பேரை பொலிஸார் நேற்று கைது  செய்துள்ளனர்.

அத்துடன் அவர்களிடமிருந்து 140 உர மூடைகளையும் பொதிசெய்யும் இயந்திரம் வாகனம் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில்  உள்ள தனியார் அரிசி ஆலை ஒன்றில் வைத்து விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்கிய உரவகைகளை சம்பவதினம் மாலை 6 மணியளவில் சட்டவிரோதமான முறையில் பொதிசெய்து விற்பனைக்காக கன்ரர் ரக வாகனத்தில் எடுத்துச் செல்ல முற்பட்டபோது அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.கே.அசார் தலைமையிலான குழுவினர் மேற்படி மூவரையும் கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மெற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X