Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 05 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
( எஸ்.எம்.எம்.றம்ஸான், எம்.சி.அன்சார் )
அம்பாறை மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்த எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித்தலைவருமான ரனில் விக்கிரமசிங்க தெஹியத்தக்கண்டிய, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறைப் பிரதேசங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டார்.
ரணில் விக்கிரமசிங்க இக்கூட்டங்களில் உரையாற்றுகையில்:-
"மக்கள் இன்று பொருளாதார பிரச்சினைக்கே முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், தொழிலின்மை உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்பி மக்களை ஏமாற்றுவதற்கு மஹிந்தவின் அரசாங்கம் முயற்சிக்கின்றது.
மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு பதில் இல்லை. முக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் இம்முறை ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று கூறுகின்றனர்.
எனவே இந்த அரசாங்கத்திற்கு அதிரடி கொடுக்க எதிர்வரும் 17ஆம் திகதி வீட்டில் இருக்காமல் மக்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்"என்றார்
இக்கூட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான தயா கமகே, சின்ன மஹ்ருப், சசிதரன், கலப்பதி, மேல் மாகாணசபை உறுப்பினர் ஏ.ஜே.முஸம்மில், மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபீர், சம்மாந்துறை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன் அலி, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உட்படல பலர் கலந்து கொண்டனர்
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago