2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு தவிசாளராக சேகு இஸ்ஸதீன் நியமனம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 06 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுத் தவிசாளராக அக்கட்சியின் ஆரம்பத் தேசியத் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச்.சேகு இஸ்ஸதீன் கட்சித் தலைமையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சேகு இஸ்ஸதீனுக்கு இந்த நியமனம் வழங்கப்படுவதற்கு முன்னர் இப்பதவியினை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய ரீதியாக தலைவர் ஹக்கீம் கட்சி விடயங்களைக் கவனித்து வருவதால், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸை கட்டியெழுப்பும் வகையிலும் கட்சி நடவடிக்கைகளில் சேகு இஸ்ஸதீனின் பெறுமதியான பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டும்  மேற்படி பதவி சேகு இஸ்ஸதீனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

முஸ்லிம் காங்கிரஸின் நிறுவுனர்களில் ஒருவரான சேகு இஸ்ஸதீன் அக்கட்சியின் ஆரம்ப தவிசாளராக இருந்து  கட்சியை வளர்த்தெடுத்தவர் என்பது இங்கு ஞாபகம் கொள்ளத்தக்கது.


  Comments - 0

  • rasmi mohamed addalaichenai Monday, 07 March 2011 01:55 AM

    எம்பி.பதவியும் கொடுங்க. உங்களைபோல .......... யாரும் இல்ல

    Reply : 0       0

    a.l.ar doha Monday, 07 March 2011 03:12 PM

    iedu pudusu இல்லை

    Reply : 0       0

    irsha Monday, 07 March 2011 05:36 PM

    ok kodutha nallathuthan

    Reply : 0       0

    Im not belong to any party!!!! Tuesday, 08 March 2011 02:59 AM

    இன்றைய அரசியல் சாக்கடையாக மாறிவிட்டது. ஊரின் நன்மையோ மக்களின் நன்மையோ முக்கியமாக கருதப்படவில்லை. சுயநலம் பிடித்த அரசியல்வாதிகளிடம் இருந்து இறைவா மக்களை காப்பாற்று.
    நிலைமை இவ்வாறு நீடித்தால் முன்பு ஒரு MPக்காக ஏங்கிய நிலை மீண்டும் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. Akkaraippattu மக்களே விழித்திடுவீர்....!!!!!!!!!!!!!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .