Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 12 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் ஐரிஸ் செஞ்சிலுவை சங்கத்தின் 75 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட சத்திரச்சிகிச்சை கூடம், குளிரூட்டப்பட்ட பிரேத அறை, இரத்த வங்கி, நோயாளர் விடுதி மற்றும் வைத்தியர் தங்குமிட விடுதி என்பனவற்றை திறந்து வைக்கும் வைபவம் இன்று பிற்பகல் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.இஸ்ஸதீன் நடைபெற்றது.
இவ்வைபவதிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீரின் அழைப்பினையேற்று உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கலந்துகொண்டார். விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிர், வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது 36 குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்;களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.துல்ஹர் நயீம், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.எஸ். இப்றாலெவ்வை, வைத்தியர்கள்,தாதிமார்கள்,ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும்; கலந்து கொண்டனர்.
1 hours ago
2 hours ago
Kannan Sunday, 13 March 2011 07:27 AM
ஊருல இருக்கிற வீதி, ஒழுங்கை, மூத்திரச் சந்தி எல்லாத்திலயும் ஞாபகக் கல்நாட்டி வீதி நிர்மாண விழா என்கிற பெயருல இலக்சன் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள் ! தேர்தல் வந்தாத்தான் சேவை செய்யத் தோணுது போல...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago