2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கல்முனை மாநகரசபை ஆணையாளராக எம்.ஏ.எம்.நியாஸ்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 14 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை மாநகரசபையின் ஆணையாளராக எம்.ஏ.எம்.நியாஸ் இன்று திங்கட்கிழமை தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மூதூரை பிறப்பிடமாகக் கொண்ட இவர், திருகோணமலை மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராகவும் ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதி ஆணையாளராகவும் ஓட்டமாவடி, கிண்ணியா, மூதூர் பிரதேசங்களின் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.  இறுதியாக போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக பதவி வகித்த இவர் கடந்த 10ஆம் திகதியிலிருந்து செயற்படும் வண்ணம் இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .