Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Super User / 2011 மார்ச் 20 , பி.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல் மேயராக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் புதல்வரான சக்கி அதாவுல்லா நியமிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.
அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் சார்பாக அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிட்ட சக்கி அதாவுல்லா 7,900க்கு மேற்பட்ட அதிகூடிய வாக்குளை பெற்றார்.
தற்போது சக்கி அதாவுல்லா, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் அந்தரங்க செயலாளராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இரண்டாவது அதிகூடிய வாக்குகளை பெற்ற முஹம்மட் றிஸான், பிரதி மேயராக நியமிக்கப்படலாம் என தேசிய காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் அமைச்சர் அதாவுல்லாவை தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்தும் பயனளிக்கவில்லை.
அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஹம்மட் தவம் மற்றும் பிரதி தவிசாளர் முஹம்மட் சபீஸ் ஆகியோர் அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் 4,000 மேற்பட்ட வாக்குகளை பெற்று முறையே 3ஆம் மற்றும் 4ஆம் இடங்களில் தெரிவுசெய்யப்பட்டனர்.
அக்கரைப்பற்று பிரதேச சபை மாநகர சபையாக கடந்த ஜனவரி மாதம் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சினால் தரமுயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Mr.X Monday, 21 March 2011 02:11 PM
நல்ல செய்தி !!! இந்த அக்கரைப்பற்று மக்கள் என்ன தவம் செய்தார்களோ இவர் போன்ற ஒருவரை இந்த முதல் மாநகருக்கு மேயராக பெற !!! வாப்பா ஒரு குதிரைஇ மகன் குட்டி குதிரை !!!! சபாஷ் அக்கரைப்பற்று....
Reply : 0 0
Mohamed Monday, 21 March 2011 02:36 PM
அராஜகம் நெடுநாள் நிலைக்காது!
Reply : 0 0
hoh Monday, 21 March 2011 03:56 PM
same like AKP people education lol.......
Reply : 0 0
acord4 Monday, 21 March 2011 04:20 PM
வென்று வா மகனே என்னை விட கூட சம்பாதி மகனே
Reply : 0 0
xmas Monday, 21 March 2011 09:49 PM
முஸ்லிம் காங்கிரஸ் செய்வதறியாது திகைக்கிறது ஹக்கீமின் பாசையில் சொன்னால் குறு நிலமன்னர்கள் இன்னும் சவலாக இருக்கும்
Reply : 0 0
abdulmohmed Monday, 21 March 2011 10:07 PM
சபாஷ் நல்ல முடிவு. பொறாமை பிடித்தவர்கள் வென்றதும் இல்லை தியாகிகள் தோற்றதும் இல்லை
Reply : 0 0
Rinas Tuesday, 22 March 2011 08:41 PM
படிக்காத ஆக்கள்தான் தேர்தலில் இறக்கி இருக்கிறம் எண்டு வாப்பா அறிக்கை விட்டவர், அதுக்கு இறை தூதரை (அறிவில்லாமல்) உதாரணம் வேற காட்டினர். மகன் தான் தலைவரோ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago