2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கல்முனையில் பணத்துக்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 23 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

பணத்துக்கான வேலைத்திட்டம் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 29 கிராம சேவகர் பிரிவுகளிலும் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் இவ்வேலைத்திட்டத்திற்காக கிடைத்த 2,800 மனித நாட்கள் வேலைத்திட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்போது தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பமுடியாது அன்றாடம் கூழித்தொழில் செய்பவர்கள்  உள்வாங்கப்பட்டு இவ்வேலைத்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 500 ரூபாய் வீதம் வழங்கப்படுவதுடன், காலை 8 மணி முதல் மாலை 2 மணி வரை வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கல்முனை தமிழ் பிரதேச செயளாலர் க.லவநாதன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .