Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 மே 12 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தின் போது முஸ்லிம் ஆசிரியர்கள் தமிழ் பாடசாலைகளுக்கோ, தமிழ் ஆசிரியர்கள் முஸ்லிம் பாடசாலைகளுக்கோ இடமாற்றம் செய்யப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தின்போது, இனரீதியான பாதிப்புகள் ஏற்படலாம் என்றும், இந்த இடமாற்றமானது சில உள்நோக்கங்களைக் கொண்டது எனவும் சிலரால் முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் தொடர்பில் கேட்டபோதே பணிப்பாளர் நிஸாம் மேற்கண்ட பதிலை வழங்கினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் மேலதிகமாக முஸ்லிம் ஆசியர்களும் உள்ளனர், தமிழ் ஆசிரியர்களும் உள்ளனர். உதாரணமாக, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி வலயத்தில் மேலதிக ஆசிரியர்களாக தமிழர்களும் உள்ளனர், முஸ்லிம்களும் உள்ளனர். சம்மாந்துறை வலயத்திலும் இதுதான் நிலை.
அதேவேளை, மட்டக்களப்பிலுள்ள கல்வி வலயங்களில் முஸ்லிம் பாடசாலைகளிலும் ஆசிரியர் பற்றாக்குறையுள்ளது, தமிழ் பாடசாலைகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. இதனடிப்படையில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு முஸ்லிம் ஆசிரியர்களையும், தமிழ் பாடசாலைகளுக்கு தமிழ் ஆசிரியர்களையும் நியமிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
தவிர, இடமாற்றத்தின் போது சம்பந்தப்பட்டவர்களின் விருப்பங்களின்றி முஸ்லிம் பாடசாலையொன்றுக்குத் தமிழ் ஆசிரியரோ, தமிழ் பாடசாலையொன்றுக்கு முஸ்லிம் ஆசிரியரோ அனுப்பி வைக்கப்படவும் மாட்டார்கள்.
எனவே, கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் மிகவும் பொறுப்புணர்வுடனும், நேர்மையுடனும் மேற்கொள்ளப்படும் என்பதை நான் கூறி வைக்க விரும்புகின்றேன்' என்றார்.
ameer Friday, 13 May 2011 02:12 AM
அக்கரைபற்று வலயத்தில் இடமாற்றம் இல்லையா
அல்லது உங்களுக்கு பயமா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago