Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 மே 13 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
கணவனுடனான சண்டையில் தனது 11 மாதக் குழந்தையை கிணற்றில் வீசிய பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குழந்தை சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவமொன்று அட்டாளைச்சேனை, பாலமுனை பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பாலமுனை, உதுமாபுர பிரதேசத்தை சேர்ந்த இளம் தம்பதியினருக்குள் சம்பவதினம் காலை 11 மணியளவில் ஏற்பட்ட சண்டையின் போதே அப்பெண் பிறந்து 11 மாதங்களேயான தனது பெண் குழந்தையை திடீர் எனத் தூக்கி வீட்டின் கிணற்றினுள்
போட்டுள்ளார்.
இதனைக் கண்ட குழந்தையின் தந்தை, கிணற்றில் குதித்து குழந்தையைக் காப்பாற்றி சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார் என்று அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
m c a fareed Monday, 16 May 2011 12:18 AM
இப்படியும் ஒரு பெண்ணா
Reply : 0 0
Anban Monday, 16 May 2011 07:16 PM
பெண் பாவம் பொல்லாதது என்று சொல்வார்களே அது இதுதானா?
Reply : 0 0
xlntgson Tuesday, 17 May 2011 09:33 PM
anger management கோபத்தை அடக்குவது எப்படி என்பது இப்போது பாடமாக சிறுவர்களுக்கும் வைக்கப்படல் அவசியம்! சுற்றாடல் பாடத்தைவிட அது பலன் தரும், ஆசிரியருக்கும் மாணவருக்கும்! "சேர்ந்தாரை கொள்ளும் சினம் என்னும் கொல்லி"
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago