2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மருந்தக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்,எஸ்.எம்.எம்.றம்ஸான்,எம்.சி.அன்சார்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் நடாத்தப்பட்ட மருந்தக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கும், ஊடகவியலாளர்கள் சந்திப்பும் நேற்று சனிக்கிழமை பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ். இப்ராலெவ்வை தலைமையில் இடம்பெற்ற, இச்செயலமர்வில் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உணவு, மருந்து பரிசோதனை அதிகாரி அமிட் பெரேரா, கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் டாக்டர் என்.எம். சுஹைப், அம்பாறை பொது வைத்தியசாலையின் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டாக்;டர் எம்.ஐ.றிபாயா, கல்முனை பிராந்திய உணவு, மருந்து பரிசோதகர் டி.வரதராஜா உட்பட பல வைத்தியத்துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு செயலமர்வை நடாத்தளாகினர்.

இந்நிகழ்வில், பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.ப்ராலெவ்வையினால் தொகுக்கப்பட்ட தனியார் மருந்தக உரிமையாளர்களுக்கான வழிகாட்டி என்ற நூலும் வெளியிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X