Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 14 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கான சட்ட விழிப்புணர்பு செயலமர்வும் இலவச சட்டசேவையும் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சட்டம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து மக்களுக்கு சட்டத்தரணிகளால் விளக்கமளிக்கப்பட்டன. அத்துடன், காணிப்பிணக்குகள், சிறுவர் துஷ்பிரயோகம், முதியோர் உரிமை, விவாகம் மற்றும் விவாக இரத்து, வீட்டு வன்முறை, பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகியன தொடர்பில் சட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சிரேஷ்ட சட்டத்தரணிகளான யூ.எல்.லியாகத் அலி, ஆரிப் சம்சுதீன், எம்.ஸாரிக் காரியப்பர், எம்.ஐ.அஸீஸ், எம்.ரீ.சபீர் அஹமட் மற்றும் கிராம அலுவலகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
kulathooran Monday, 14 November 2011 09:09 PM
ஊருக்கு மேயர் கிடைத்ததினால் நடந்த நல்ல நிகழ்வு,கல்முனை பிராந்திய சட்ட உதவி ஆணை குழுவினருக்கு வாழ்த்துகள். முகவெற்றிலை மா நகரின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.
Reply : 0 0
pasha Monday, 14 November 2011 09:43 PM
போகும் போக்கை பார்த்தால் சாய்ந்தமருதுவில் நடக்கும் எல்லாதிற்கும் மேயர் தான் செய்தார் எண்டு சொல்வினம் போல.
Reply : 0 0
kulathooran Tuesday, 15 November 2011 03:12 AM
சட்டத்தரணிகளே? மா நகர அபிவிருத்தியில் மேயர் அவர்களது வரி அறவீடு அமுலாக்கப்படும்போது ஊர் வரிஇருப்பாளர்கள் அதற்கு எதிராக வந்தால் இலவச சட்ட உதவி வழங்குவீர்களா? மேயர் அவர்களை இக்கட்டான நிலைக்கு ஆளாக்கமாட்டீர்களே?
Reply : 0 0
mbm Tuesday, 15 November 2011 03:37 PM
உங்கட ஊரில் எல்லா செயற்பாட்டிற்கும் மேயர்தான் காரணம் என்றால் மற்ற ஊரெல்லாம் என்ன நாறிப்போய் கிடக்குதா? பாராட்டுகிறோம் என்ற பெயரில் அந்த மனிதரை (மேயரை) நீங்களே கேவலப்படுத்தாதீங்கப்பா! அவர் நல்ல மனிதர். அவர் கல்முனை மாநகர அனைத்து மக்களுக்கும் தேவையானவர்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
56 minute ago
2 hours ago