Menaka Mookandi / 2012 ஜனவரி 20 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினூடாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தீகவாபி கிராமத்துக்கு குறித்த சில தேவைகளை நிறைவேற்றித் தருவதாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் உறுதியளித்துள்ளார்.
தீகவாபிக் கிராமத்துக்கு நேற்று வியாழக்கிழமை சமூகமளித்த பிரதேச சபை உறுப்பினர் முனாஸ், அங்குள்ள பொதுமக்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் தீகவாபி விகாராதிபதி ஆகியோரைச் சந்தித்துப் பேசியதோடு, அங்குள்ள குறைபாடுகள் குறித்தும் அறிந்து கொண்டார்.
இதனையடுத்து, தீகவாபி கிராமத்துக்குத் தேவையான குறித்த சில தேவைகளை, பிரதேச சபை உறுப்பினர்களுக்கு – பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக வழங்கப்படும் நிதியினைக்கொண்டு நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.
அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தும் பொருட்டு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக – பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
.jpg)
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
senaiyuraan Saturday, 21 January 2012 04:20 AM
யாரோ செய்யும் வேலைகளுக்குள் குடைவது வழமைதான். இது ஒண்ணும் புதுசு இல்ல தன்னால் செய்ய முடியாட்டி முடியுமாணவர்களோடு சேர்ந்து செய்ரதானே?
விட்டுப்போட்டு அமைச்சர் ஆரம்பிக்கும் அபிவிருத்தியியை அடுத்த நாட்களில் சென்று தாங்கள் செய்வது போண்று எக்சன் எடுப்பது நல்லம் இல்ல.
Reply : 0 0
senaiyuraan Thursday, 26 January 2012 06:29 PM
நல்லவைகளை செய்தால் பாராட்டலாம். அதை விட்டு சும்மா போய் எக்சன் காட்டினால் என்ன செய்றது . எங்கட பிள்ளைகள் செய்த வேலைகளுக்கு பாராட்டுவது என்றால் வருசம் புல்லா பாராட்டலாம்.
Reply : 0 0
சிறாஜ் Tuesday, 24 January 2012 02:55 PM
நல்லவனாக இருப்பது இலகு. ஆனால் நல்லவனாக இருப்பதாக நடிப்பது மிகவும் கஷ்டம். அதுதான் இப்போது சேனையூரான் பக்கம் நடக்கிறது. அடக்கி வாசிப்போம். நல்லது செய்யும் அனைவரையும் பாராட்டுவோம். முடியாவிட்டால் வாய் மூடி இருப்போம்.
Reply : 0 0
சேணையுரான் Monday, 23 January 2012 04:36 AM
சிறாஜ் விதண்டாவாவம் நாங்க பண்ணுரல்ல பன்னப்போரதும் இல்ல.
நானும் அதைத்தான் சொல்லுகின்றேன் பதவி அதிஸ்டம்தான். அந்த அதிஸ்டம் எங்க அமைச்சருக்கு கிடைத்துள்ளது அவ்வளவுதான்.
மாகாணத்தை ஆள வரல்ல என்று ஏலவே சொள்ளிட்டன் ஐயா நீங்க டூ லேற்.
Reply : 0 0
சேனையூரான் Sunday, 22 January 2012 06:39 PM
அட்டாளைச்சேனையின் அபிவிருத்தி எங்கே செல்கிறது என்பதனையும் பிரதேச சபை எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பதனையும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் .ஏன்னா மக்களின் ஏராளமான புகார்கள் ஊரில் உள்ளது ..
Reply : 0 0
hani Sunday, 22 January 2012 06:36 PM
2012 இல் அட்டாளைச்சேனை என்ன அபிவிருத்தி கானுது என்று பார்ப்போம். காட்டிலும் வயலிலும் தேவையற்ற சேவையினை விட்டு மக்களின் தேவையாக இருக்கும் மழை நீர் வடிந்தோடும் வடிகான்களையும் பாதைகள் இருட்டில் மூழ்கிக்கிடக்கும் அதனை வெளிச்சமாகவும் மாற்றுங்கள்
Reply : 0 0
muhammath Ranoos Sunday, 22 January 2012 05:00 PM
வாழ்த்துக்கள் முனாஸ்!...தொடரட்டும் உங்கள் பயணம் .....
Reply : 0 0
AHAMED JUNAID Sunday, 22 January 2012 04:05 AM
தீகவாப்பி பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதத்கு முன்வந்த மறைந்த மர்ஹும் அஷ்ரப் அவர்களுக்கு பிக்கு ஒருவர் அஷ்ரபுக்கு, அபிவிருத்தி செய்வதத்கு ஆசை இருந்தால் மக்காவுக்கு சென்று அபிவிருத்தி செயலாம் என்று ஒரு தடவை கூறியதையும் தம்பி முனாஸ் அறிந்து கொள்ளவேண்டும்.
Reply : 0 0
சிறாஜ் Saturday, 21 January 2012 06:01 PM
சேனையூரான் சேனையில் வேலை இல்லை போல. அதுதான் உளம்பல் பெரிசா இருக்கு.
Reply : 0 0
சிறாஜ் Saturday, 21 January 2012 05:43 PM
விதண்டாவாதம் பண்ண எங்களுக்கும் தெரியும். பதவி என்றும் எப்போதும் ஒருவரிடம் இருக்க போவதில்லை. அது ஒரு அதிஷ்டம்..
Reply : 0 0
senaiyuraan Friday, 20 January 2012 07:56 PM
அடுத்த தேர்தலுக்கான வாக்கு வேட்டைக்கு முன் கூட்டிய ஒத்திகையா ?? அடுத்த தேர்தல் தொகுதிவாரி என்று மறக்க வேண்டாம்.
Reply : 0 0
Punnakai Friday, 20 January 2012 11:41 PM
எப்புடி அய்யா இப்புடி எல்லாம் உங்களுக்கு சொல்ல முடியுது
நல்ல பாம்பு படமெடுக்குது என்று நாக்கிலம் புளுவும் படமெடுக்குதாடி தங்கங்கால்
கடந்த இரு வாரங்களுக்கு முன்னால் அமைச்சர் உதுமான் அவர்கள் தீகவாபி சென்று கொங்ரீட் வீதிக்கான அடிக்கல் நாட்டி தற்போது கொங்ரீட் இடும் வேலை ஆரம்பித்துள்ளதுடன் சனசமுக நிலையமொன்றையும் கட்டி தருவதாக உறுதி மொழியும் வழங்கிவிட்டுதான் வந்தார்.
Reply : 0 0
zaro Friday, 20 January 2012 10:28 PM
சிராஜ்
உங்கட தலைய போல எங்க அமைச்சர் செக்கனுக்கு மாறமாட்டார். அழிந்து போய் உள்ள பெயரை மீண்டுள் எழுதி வைக்க
சொல்லுங்க . உங்கட பிள்ளைகளுக்கிட்ட தலைவர் கண்ட அஸ்ரப் கண்ட கனவுகளையும் கொஞ்சம் சொல்லி கொடுங்க.
Reply : 0 0
zaro Friday, 20 January 2012 10:22 PM
சிராஜ்
யாருக்கும் வங்குரோத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது மீண்டும் சொல்லுகின்றேன் அமைச்சரை தேடி எல்லாம் (பதவி)வந்திட்டு மாகாணத்தில் அதைவிட என்ன வேண்டும் அவருக்கு!
எங்க அமைச்சர் இன்றும் கிழக்கின் முதலமைச்சர் என்ற தமிழ் மிரர் செய்தியை பாருங்க புரியும். ஊரில நிறைய உறுப்பினர்கள் வந்து ஒண்ணும் செய்யாம போய்டாங்க. இவங்க என்னத்த செய்வாங்க என்று பொறுத்திருதுதான் பார்க்கணும்
Reply : 0 0
senaiyuraan Friday, 20 January 2012 10:09 PM
சிராஜ் உங்கட பிள்ளைகள் நல்லவர்கள்தான், எதில் வல்லவர்கள் என்றும் எங்களுக்குத் தெரியும்.
Reply : 0 0
senaiyuraan Friday, 20 January 2012 10:08 PM
நல்ல பாம்பு படமெடுக்குது என்று நாக்கிலம் புளுவும் படமெடுக்குதாடி தங்கங்கால்
Reply : 0 0
சிறாஜ் Friday, 20 January 2012 09:09 PM
பிரதேசசபை உறுப்பினர்கள் இனிமேல் முஸ்லீம் காங்கிரசின் பெயரைக் காப்பாற்றுவார்கள் என்று நினைக்கிறேன்.
Reply : 0 0
சரோ Friday, 20 January 2012 09:07 PM
எப்படித்தான் என்ன செய்தாலும் எங்கட அமைச்சர் மாதரி வருமா இருந்தாலும் முனாசுக்கு வாழ்த்துக்கள்.
Reply : 0 0
நண்பன் Friday, 20 January 2012 09:06 PM
சிங்கம்டா தவிசாளராக வரவேண்டியவர்தான் இந்த உறுப்பினர். வாழ்த்துக்கள் இன மதம் பாராது தீகவாபி திராய்க்கேணி எங்கும் சென்று சொந்த செலவிலும் சேவை செய்யும் உங்க திறமைய பாராட்டுகிறேன்.
Reply : 0 0
சிறாஜ் Friday, 20 January 2012 09:03 PM
அது உங்கட வங்குறோத்து அரசியல் செய்யும் அமைச்சர்தான் அப்படி சேவையை செய்வது. இது எங்கட பிள்ளைகள் நல்லவர்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025