2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

முன்பள்ளிகளின் பயன்பாட்டுக்கான பொருட்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 ஜூலை 28 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை தெற்கு முன்பள்ளி சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் முன்பள்ளிகளின் பயன்பாட்டுக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

சம்மேளனத்தின் தலைவர் இஸட். ஏ.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மருதூர் ஏ மஜீட், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.பாயிஸ், கலாநிதி எஸ்.எல்.றியாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தனது நிதியிலிருந்து சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான கதிரைகள், அலுமாரிகள், மேசைகள், மின்விசிறிகள் போன்றவற்றை முன்பள்ளிகளின் பொருப்பாளர்களிடம் வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X