2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அஸ்/ சிறாஜ் மகா வித்தியாலய புனரமைப்பு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன பார்வை

Kogilavani   / 2012 ஜூலை 30 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன் வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 12ஆம் கொளணி அஸ்/ சிறாஜ் மகா வித்தியாலயத்தில் புனரமைக்கப்படவுள்ள நவீன வசதிகளுடன் கூடிய வகுப்பறைக் கட்டிடம் மற்றும் விளையாட்டு மைதானம் என்பவற்றை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான பீ.எச்.பியசேன நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று பார்வையிட்டார்.

தேசத்தின் மகுடம் வேலை திட்டத்தின்கீழ் 55 இலட்சம் ரூபா செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் எம்.ஐ.எம்.றியாஸ், அதிபர் எஸ்.எம்.யூசூப், நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் வை.எல்.எம். சுலைமாலெப்பை, நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் ஏ.கே.எம்.சமட் உட்பட பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ் அபிவிருத்திப் பணிகள் 2013ம் ஆண்டு நடைபெறவுள்ள தேசத்துக்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான பீ.எச்.பியசேனவினால் முன்னெடுக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .