2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கல்முனை மாநகர சபையின் சாரதி சரீர பிணையில் விடுதலை

Super User   / 2012 ஜூலை 30 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான் )

சட்டவிரோதமாக கடல் மண் ஏற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபையின் சாரதியை 50,000 ரூபா சரீர பிணையில் இன்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான உழவு இயந்திரத்தின் மூலம் சட்டவிரேதமாக கடல் மண் ஏற்றிய குற்றச்சாட்டில் கல்முனை மாநகர சபை சாரதி கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடள் உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டது.

குறித்த சாரதி கல்முனை மாவட்ட நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் இன்று ஆஜர்செய்யப்பட்டார். இதன்போது குறித்த வழக்கை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி, சந்தேகநபரான மாநகர சபை சாரதியை 50,000 ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ய உத்தவிட்டதுடன் உழவு இயந்திரத தொடர்ந்து தடுத்துவைக்க உத்தரவிட்டார்.

இவ்வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X