2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

சம்மாந்துறையில் குடும்பத் தலைவர்களை இழந்தவர்களுக்கு வீடுகள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 05 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


அம்பாறை, சம்மாந்துறைப் பிரதேசத்தில் குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் சமூக அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் நாட்டின் சகல பகுதிகளிலும்  குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்து வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்; இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஆர்.பி.பந்துல திலகசிறி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், அம்பாறை மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் யூ.எல்.எம்.சலீம், தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • rima Sunday, 05 August 2012 10:31 AM

    வீடுகளை கொடுக்கும் போது நல்ல முறையில் கொடுக்கவும். அறைகுறையில் கொடுக்க வேண்டாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X