2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

காவியுடை பயங்கரவாதத்தையும் ஜனாதிபதி ஒழிக்க வேண்டும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                                                         (அப்துல் அஸீஸ்)

ஜனாதிபதி எவ்வாறு பயங்கரவாதத்தை ஒழித்தாரோ அதேபோன்று தற்போது காணப்படும் பயங்கரவாதத்தையும் அது காவி உடை அணிந்த பயங்கரவாதமாக இருந்தாலும் சரி அதையும் ஒழிப்பதற்கு ஜனாதிபதி  முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கல்முனைத் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கும் கூட்டம் சாய்ந்தமருதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கே.எம்.ஏ.ஜவாத், ஏ.எம்.ஜெமீல், ஏ.ஆர்.அமீர், துல்கர் நயீம் ஆகிய வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

"தற்போது தலைதூக்கியிருக்கும் இந்தப் பயங்கரவாதமானது வட, கிழக்கில் இருக்கும் முஸ்லிம்களை விட வட, கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்களை மிக மோசமாக பாதித்துள்ளது. நிம்மதியாக பள்ளிவாசல்களில் தொழமுடியாத நிலைமை உருவாகியுள்ளது. இந்த ரமழான் மாதத்தில் கூட முஸ்லிம்கள் கூட்டாக சேர்ந்துகொண்டு ஒரு வீட்டில் தொழமுடியாத ஒரு அச்ச சூழ்நிலையை இந்தப் பயங்கரவாதம் தோற்றுவித்துள்ளது.

இந்த பயங்கரவாதத்தை இல்லாமல்ச்செய்ய காத்திரமான நடவடிக்கைகள் இல்லையா என மக்கள் என்னிடத்தில் ஆத்திரத்துடன் கேட்கின்றனர். இவ்வாறான விடயங்களை பேசக்கூடாது என்ற வரையறையுடன் நாங்கள் இருக்கவேண்டும் என்பது ஜனநாயகத்திற்கு விரோதமான விடயமாகும்.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும். அந்தத் தீர்வைக் காண வட, கிழக்குக்கு வெளியே அச்சத்துடன் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுக்கு,  கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களது வாக்குப் பலத்தினால் அதிருப்தியை வெளிக்கொணர வேண்டும்" என்றார்.





  Comments - 0

  • saf Monday, 06 August 2012 11:37 AM

    நல்லதொரு உரை, காலத்திற்கு அவசியம்.

    Reply : 0       0

    ramalan Monday, 06 August 2012 12:51 PM

    கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பள்ளிகளில் ஒரு பிரச்சினையையும் இல்லை. சும்மா அங்குள்ள மக்கள உணர்ச்சிவசப்படுத்தாம ஜனாதிபதி மாளிகையில போய் உரத்து கத்துங்க.

    Reply : 0       0

    sun Monday, 06 August 2012 01:22 PM

    உண்மையைச் சொல்லி இருக்கிறார்.

    Reply : 0       0

    kuhan Tuesday, 07 August 2012 05:10 AM

    ஜனாதிபதி : ஹி .....ஹி ,பாவம் ஹக்கீம்

    Reply : 0       0

    Suhaib Tuesday, 07 August 2012 07:40 AM

    அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு வாழ்கை நடத்துபவர்கள் சிரிப்பார்கள். சிரிப்புத்தான் இவர்களின் முதலீடு. இவ்வவாறு பேசுவதற்கு முதுகெலும்பு பலமாக இருக்க வேண்டும்

    Reply : 0       0

    சிறாஜ் Tuesday, 07 August 2012 12:33 PM

    இது தலைவன் தலைவன் இப்படித்தான் இருக்க வேண்டும். பதவிக்கு சோரம் போய் இருக்கும் அமைச்சர்களையும் ஊருக்கொரு கட்சி தலைவர்களையும் திருந்தச்சொல்லுங்கோ இவர்களை ஹக்கீமை பார்த்து...........

    Reply : 0       0

    ahamed Tuesday, 07 August 2012 06:38 PM

    சந்தர்ப்பத்திற்கு கதைத்து மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அரசியலை அல்லாஹ்வுக்காக கைவிடுங்கள். சமுகத்தை பற்றி சிந்தியுங்கள். கிழக்கு மக்கள் இன்னமும் மடையர்களுமமல்ல சமூகத்திற்கு ஏதாவது செய்யும் தலைவர்கள் யாராக இருந்தாலும் பரவா இல்லை அவர்களை ஆதரியுங்கள். .ஹக்கிம் இயலுமென்றால் அரசாங்கத்தில் இருத்து வெளியே வாருங்கள். உங்கள் பேச்சை நம்புவோம்.

    Reply : 0       0

    faamil Saturday, 11 August 2012 10:40 AM

    சந்தர்ப்பத்திற்குதான் கதைக்க வேன்டும் உங்களுக்கு நாட்டுல என்ன நடக்குது உலகத்துல என்ன நடக்குதன்டு தெரிஞ்சாதானே? பதவிக்கு ஜால்ரா அடிகிறவங்க பின்னால திரியாம நரகவாதி ஆகாம முஸ்லிம்களுக்காக மட்டுமல்லாமல் நாட்டுக்காக அதுமட்டுமல்ல மனித நேயத்திற்கு குரல் கொடுப்பவன் பக்கம் ஆதரவு காட்டுங்க அல்லஹ் அதற்குரிய நன்மைய தருவான் ஆ...மீம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X