2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

ஹசன் அலி, ஹரீஸ் எம்.பி.களின் வாகனங்கள் மீது அக்கரைப்பற்றில் தாக்குதல்

Super User   / 2012 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(யொஹான் பெரேரா)


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களினான ஹஸன் அலி, எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோரின் வாகனங்கள் மீது அக்கரைப்பற்றில் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியின் மாகாண சபை தேர்தல் வேட்பாளர்களும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.

இன்று மாலை, மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிக்கொண்டிருந்தபோது, அக்கரைப் பற்று பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காயம் எதுவும் ஏற்படாத போதிலும் அவர்களின் வாகனங்கள் சேதமடைந்ததாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. இத்தாக்குதலுக்கு தேசிய காங்கிரஸ் மீது அவ்வட்டாரங்கள் குற்றம் சுமத்தின.

இச்சம்பவத்தையடுத்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேட்பாளர்களும் அக்கரைப் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டனர். (படங்கள் - எஸ்.மாறன்)



  Comments - 0

  • uvais.m.s Friday, 31 August 2012 02:19 PM

    முஸ்லிம்களே முஸ்லிம் மக்களின் எதிரிகள் ஆகிறார்கள்.

    Reply : 0       0

    Miswer Friday, 31 August 2012 02:30 PM

    60 பதுகளில்(1960) வியட்னாம் யுத்தத்தில் தனது பலத்தை உலகுக்கு காட்ட நினைத்த அமெரிக்க ஜனாதிபதிக்காக "கடற்கரையில் இருக்கும் ஒரு பெரிய மலைகூட தேய்ந்து தேய்ந்து ஒருகட்டத்தில் இல்லாமல் போய்விடும்" என்று எழுதினான் ஒரு அமெரிக்க கவிஞன். இதைத்தான் அக்கரைப்பற்றில் நடக்கும் சம்பவங்களை வாசித்து விட்டு யோசிக்க வேண்டியிருக்கிறது.

    Reply : 0       0

    Kanavaan Friday, 31 August 2012 02:55 PM

    முற்பகல் செய்தது பிற்பகல் விழையும்.

    Reply : 0       0

    கிழக்கன் Friday, 31 August 2012 03:23 PM

    நீங்கள் கோdsf ds

    Reply : 0       0

    meenavan Friday, 31 August 2012 04:59 PM

    அண்ணன் தம்பி சண்டை அடுத்தவர்களுக்கு கண் குளிர்ச்சி......?

    Reply : 0       0

    kiyas Friday, 31 August 2012 06:59 PM

    அடாவடி...

    Reply : 0       0

    shan Friday, 31 August 2012 09:41 PM

    உலகின் முஸ்லிம்களின் எதிரிகள் கையாளும் ஒரே ஆயுதம் முஸ்லிம் களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு தன் காரியத்தை சாதிப்பது... அதுக்கு அக்கரைப்பற்று மட்டுமல்ல முழு இலங்கை முஸ்லிம்களும் ஆழாகிவிட்டார்கள்...?????

    Reply : 0       0

    najeem Saturday, 01 September 2012 02:26 AM

    முற்பகல் செய்தது பிற்பகல் விழையும்...

    Reply : 0       0

    unarvu Saturday, 01 September 2012 07:48 AM

    60 பதுகளில்(1960) வியட்னாம் யுத்தத்தில் தனது பலத்தை உலகுக்கு காட்ட நினைத்த அமெரிக்க ஜனாதிபதிக்காக "கடற்கரையில் இருக்கும் ஒரு பெரிய மலைகூட தேய்ந்து தேய்ந்து ஒருகட்டத்தில் இல்லாமல் போய்விடும்" என்று எழுதினான் ஒரு அமெரிக்க கவிஞன். இதைத்தான் அக்கரைப்பற்றில் நடக்கும் சம்பவங்களை வாசித்து விட்டு யோசிக்க வேண்டியிருக்கிறது.

    Reply : 0       0

    Haniff Saturday, 01 September 2012 09:51 AM

    அரசியலில் நிரந்தரமான எதிரியும் இல்ல நிரந்தரமான‌ நண்பனும் இல்ல. இதுக்கு போய் அலட்டிகலாமா....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X