2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கடும் காற்று, மழையால் அம்பாறையின் கரையோரப் பிரதேசங்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 01 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் இன்று பிற்பகல் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதோடு, இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டது. கடும் காற்று காரணமாக, வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதோடு, மரங்களும் வீழ்ந்தன.

வீதியோரங்களில் நின்ற மரங்கள் வீழ்ந்தமையினால், மின் மற்றும் தொலைபேசிக் கம்பங்கள் சேதமடைந்ததோடு, அவற்றின் செயற்பாடுகளும் சில பகுதிகளில் தடைப்பட்டுள்ளன.

குறிப்பாக, நிந்தவூர் பிரதேசத்தின் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் நின்றிருந்த சுமார் 200 வருடங்கள் பழைமையான மரமொன்று வீழ்ந்ததால், அருகிலிருந்த மதிற்சுவர், வீட்டுக்கூரைகள் மற்றும் மின், தொலைபேசிக் கம்பங்கள் என பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, அப் பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை - காரைதீவு, அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட ஒலுவில், பாலமுனை போன்ற பகுதிகளில் மரங்கள் வீழ்ந்தமையினால் தொலைத் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சில வீடுகளும் சேதமடைந்துள்ளன.



  Comments - 0

  • Aatheelkhan Sunday, 02 September 2012 12:20 PM

    நல்லம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X