2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்கு முன்னாள் துப்பாக்கி சூடு

Super User   / 2012 செப்டெம்பர் 02 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினரும் சட்டத்தரணியும் சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினருமான எஸ்.எம்.எம் முஸ்தபாவின் சம்மாந்துறை ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள வீட்டிற்கு முன்னாள் இனந்தெரியாத குழுவினரினால் இன்று ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி சுட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின் போது வீட்டிற்கு எவ்விதப் பாதிப்பும் இடம்பெறவில்லை. எனினும் வீட்டிற்கு அருகில் வெற்று தோட்ட ரவைகள் மற்றும் இரத்த கரைகளும் காணப்பட்டுள்ளன. சம்மாந்துறை சியா சந்தியில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் பிரசார கூட்டத்தில் சட்டத்தரணி முஸ்தபா கலந்துகொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்து இன்று காலை அம்பாறை குற்றப்புலனாய்வு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக சம்மாந்துறையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக சட்டத்தரணி முஸ்தபா தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X